- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

‘இது அரசுக்கும் மக்களுக்கும் ஒரு முன்னறிவிப்பு’: சென்னை மழை குறித்து கமல் ட்வீட்
வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்துவரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் மழையால் சென்னையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தனது கவலையைக் குறிப்பிட்டு ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
அதில், “இது அரசுக்கும் மக்களுக்கும் கொடுக்கப்படும் முன்னறிவிப்பு. உடனே செயல்பட்டால் வருமுன் காப்பதாகும். எனக்கு வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கூடவே ஒரு அறிக்கையையும் இணைத்துள்ளார். அதில், “சென்னையின் வடமேற்கு, தென்மேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. சேலையூர் ஏரி, கூடுவாஞ்சேரி நந்திவரம் பெல்ட் ஏரி, சிட்லபாக்கம் ஏரி, நாராயணபுரம் முடிச்சூர் ஏரிகள் நிரம்பி வழிய அதிக நேரமாகாது. நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இவ்வேரிகளின் கொள்ளளவு தெரியாது.
நீர்வரத்து பாதைகளும், நீர் வெளியேறும் பாதைகளும் தெரியாது. தெரியாது என்பதைவிட நில ஆக்கிரமிப்புக்கு வசதியாய் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது என்பதே கசந்து குமட்டும் உண்மை. நன்மங்கலத்தில் இருந்து மற்றொரு ஏரிக்கு நீர் வரும் பாதையை மறித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் 2015-லேயே உத்தரவு பிறப்பித்துவிட்டது. எனினும், இன்றுவரை சட்டம் மீறப்பட்டே வருகிறது. அப்பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்புடன் இருக்கவும் குரலெழுப்பவும் ஊடகங்கள் தயவாய் உதவ வேண்டும். வருமுன் காப்போம். நித்திரை களைப்போம்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
அண்மைக்காலமாகவே நடிகர் கமல்ஹாசன் தமிழக அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இன்று (நவம்பர் 1) மாலைகூட கொடுங்கையூரில் மின்சாரம் பாய்ந்து சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் தற்போது சென்னை மழை குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.