- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி : பிரதமர் மோடி
இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா, ராஜ்யசபாவிலும் நிறைவேறியுள்ளது. மசோதாவுக்கு அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளதை காணும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. விவாதத்தின் போது எம்.பி.,க்கள் தங்கள் புத்திசாலித்தனமான கருத்துகளை வெளிப்படுத்தினர். மசோதா நிறைவேறியது சமூகநீதிக்கு கிடைத்த பெரும் வெற்றி.
இது இளைஞர்கள் தங்களது வலிமையை வெளிப்படுத்தவும், இந்தியாவின் மாற்றத்திற்கு பங்களிக்கவும் உத்வேகமாக அமையும். வலுவான இந்தியாவை உருவாக்க நினைத்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், அரசியலமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நன்றி. இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
பொதுப்பிரிவினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா, லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவிலும் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது.