இடைவெளியை பின்பற்றாவிட்டால் $5000 CAD அபராதம் – டொராண்டா நகர மேயர் ஜான் டோரி

கனடாவின் டொராண்டோ நகரில் ஒரே வீட்டில் வசிக்கும் இரண்டு நபர்கள், 6 அடி இடைவெளியை கடைபிடிக்க தவறினால் $5K CAD மேல் அபராதமாக விதிக்கப்படுமென எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ஒரே வீட்டில் வசிக்காத இரண்டு நபர்கள் பூங்கா அல்லது பொது இடங்களில் சந்திக்கும் போது 2 மீட்டர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இடைவெளியை கடைப்பிடிக்க தவறுவோர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை மற்றும் 5000 CAD அபராதமாக விதிக்கப்படுமென டொராண்டா நகர மேயர் ஜான் டோரி அறிவித்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக கனடாவில் அவசரநிலை நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இருந்தும் பெரும்பாலான கனடா மக்கள் பொது சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களான சமூக விலகல் அல்லது இடைவெளியை கடைப்பிடிக்காமல் அலட்சியம் செய்வதால் கவலை அதிகரித்தது. இதனையடுத்து கடுமையான அபராத தொகையை விதிப்பதென உயர் அதிகாரிகள் முடிவுக்கு வந்தனர்.

தற்போது கனடாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 466 ஆக அதிகரித்துள்ளதாக அரசின் தலைமை டாக்டர் தெரசா டாம் தெரிவித்துள்ளார்.