இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி

இசையமைப்பாளர் இமான் அவர்களது மிகவும் ஆர்ப்பாட்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் உள்ள புகழ்பெற்ற வெம்பிளி அரங்கில் நடைபெறுமென உலகெங்கும் தீவிரமான விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.
கனடாவிலிருந்தும் பாடகிகள் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் மற்றும் சரிகா சிவநாதன் ஆகியோர் விசேடமாக அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் லக்சுமி சிவனேஸ்வரலிங்கம் தான் போகன் திரைப்படத்திற்காக பின்னணி பாடிய “செந்தூரா” பாடலைப் பாடினார். கனடாவிலிருந்தும் உலகெங்கும் இருந்தும் பலரும் ரசிக்க முயற்சி எடுத்திருப்பார்கள். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றம் தான்
மேற்படி இசை நிகழ்சசிக்கு எதிர்பார்ககப்பட்ட வண்ணம் மக்கள் பெருந்திரளாக வரவில்லை. அத்துடன் அதிகமான பாடல்களுக்கு (வாத்தியகருவிகள் மேடையில் குவிக்கப்படடிருந்தாலும்) வாத்தியக் கருவிகளிலிருந்து பின்னணி இசை வரவில்லை என்றும் சிடிக் கள் மூலமான இசையே அங்கு பகிரப்பட்டது என்றும் இசை அவதானிகள் பலர் உலகெங்கும் செய்திகளை அனுப்பியவண்ணம் உள்ளார்கள்.
குறிப்பு:- சில வருடங்களுக்கு முன்னர் கனடாவில் நடத்தப்பெற்ற இசையமைப்பாளர் இமான் அவர்களது நிகழ்ச்சியில் கூட இந்த “சிடிக்கள்” பிரச்சனை இருந்தது என்று தான் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கருத்துக்கள் பகிரப்பட்டன.
புலம் பெயர் ரசிகர்கள் “மட்டமானவர்கள்” என்ற எண்ணத்தை நாம் முறியடிக்க வேண்டும்.
மிகுந்த எதிர்பார்ப்போடு மண்டபத்திற்கு வருகின்ற இசை ரசிகர்களை இவ்வாறு ஏமாற்றுவதற்கு “எந்த” இசையமைப்பாளருக்கும் இனிமேல் இவ்வாறான எண்ணம் வரக்கூடாது என்பதற்காகத் தான் இந்தப் பதிவு.