இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா

இங்கிலாந்து வாழ் பிரபல எழுத்தாளர் வவுனியுர் இரா. உதயணன் எழுதிய ஏழு நூல்களின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (12-05-2017) அன்று மாலை ஸ்காபுறோ நகரில் உள்ள ஜேசிஎஸ் விழா மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கையிலிருந்து கனடாவிற்கு வருகை தந்துள்ள பிரபல எழுத்தாளர், முன்னாள் அரசின் உயர் அதிகாரி உடுவை தில்லை நடராஜா விழாவிற்கு தலைமை தாங்கினார். சேக்கம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் தமிழ்பேசும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் திரு ஹரி ஆனந்தசங்கரி உட்பட பலர் உரையாற்றினார்கள்.

பல்வேறு துறை சார்ந்தவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் இறுதியில் எழுத்தாளர் இரா உதயணன் நன்றியுரையும் பதிலுரையும் ஆற்றினார்.