இகுருவி நிறுவனம் நடத்தும் இகுருவி இரவு மற்றும் விருது வழங்கும் நிகழ்வு

 

 

 

 

 

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 2ம் திகதி மாலை ஸ்காபுறோ கொன்வென்சன் விழா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மேற்படி விழாவிலும் இகுருவி நிறுவனம் நடத்தவுள்ள கல்வி ◌தொடர்பான கருத்தரங்கிலும் பங்குபற்ற யாழ்ப்பாண மண்ணிலிருந்து தொடர்ச்சியாக பல ஆண்டுகள் (யுத்த காலத்தைய கொடுமைகளைச் சந்தித்தும் சமாளித்தும்…….}கல்விப் பணி ஆற்றுகின்ற ஆசான் குணசீலன் அவர்கள் இன்று மாலை பியர்சன் விமான நிலையத்தில் தனது துணைவியார் சகிதம் வந்திறங்கினார்.
அவரை வரவேற்கச் சென்ற நண்பர்கள் ஆசானின் முன்னாள் மாணவர்கள் (இந்நாள் கனடா வாசிகள்), மற்றும ஊடக நண்பர்கள் வர்த்தக நண்பர்கள் மற்றும் இகுருவி குழாம் ஆகியோர் விமான நிலையத்தில் கூடியிருந்தனர்.
ஆசான் குணசீலன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் பல வருடங்களாக விஞ்ஞான பாட ஆசிரியராக விளங்கிவருபவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் அதிபராக விளங்குகின்றவர்.
அத்துடன் பல மருத்துவர்களையும் உயர் அதிகாரிகளையும் கல்வி மான்களையும் உருவாக்கியவர் என்பதை கேள்வியுற்றபோது எமது உள்ளம் புளாங்கிதமடைந்தது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!