ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் 4 போட்டி கொண்ட தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது. முதல் போட்டி புனேவில் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. அதற்கு அடுத்த போட்டி பெங்களுருவில் மார்ச் 4ம் தேதி ஆரம்பமாக உள்ளது. இந்த 2 போட்டிகளிலும் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் வென்ற வீரர்களே விளையாடுவர் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

கேப்டன் விராட் கோலி, அஸ்வின், ஜடேஜா, புவனேஷ்குமார், அபினவ் முகுந்த் ஆகியோர் வழக்கம் போல் அணியில் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தவிர கருண்நாயர், ஹர்திக் பாண்டியா, சேதேஸ்வர் புஜாரா, அஜின்கிய ரஹானே, ராகுல், சாஹா, இஷாந்த் சர்மா, முரளி விஜய், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ் அதே பதினாறு வீரர்கள் வாய்ப்புகளை பெற்றுள்ளனர்.

அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்க ஆட்டக்காரர் ரோஹித், வேகப்பந்து வீச்சாளர் சமி மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் காயத்தில் இருந்து மீளாததால் வாய்ப்பு பெற முடியவில்லை. தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணி முன்னதாகவே இந்தியா வந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.