- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ‘திடீர்’ ஆலோசனை
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்திவிட்டார். தினத்தந்திக்கு ஏற்கனவே அளித்த பேட்டியில், ரஜினிகாந்துக்கு போட்டியாக நான் அரசியலுக்கு வரவில்லை. புதிய கட்சி பெயர், கொடி, சின்னம் உருவாக்கும் பணிகளை தொடங்கிவிட்டேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியிருந்தார். அரசியலில் முழுமையாக ஈடுபடும் சூழலில் சினிமாவை விட்டு விலகி விடுவீர்களா? என்ற கேள்விக்கு அதுதான் நியாயமாக இருக்க வேண்டும் என்று எனக்கு தோன்றுகிறது. இரண்டு படகுகளில் கால் வைத்துக்கொண்டு இருக்க முடியாது என பதிலளித்து இருந்தார். அரசியல் குறித்து பேசிவரும் நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.
அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கை குறித்து ஆலோசனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.