- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஆர்.கே.நகர் வேட்பாளரை தேர்வு செய்ய சசிகலா தலைமையில் அதிமுக ஆட்சிமன்ற குழு: டிடிவி தினகரன் அறிவிப்பு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை முடிவு செய்ய, சசி கலாவின் தலைமையில் ஆட்சி மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ள தாக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்குப் பிறகு, சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி காலியாக இருப் பதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி யில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதிமுகவில் பொதுச் செயலாளர் சசிகலா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் தனித் தனியாக செயல்பட்டு வரும் நிலையில், இடைத்தேர்தல் அறி விப்பு வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேற்று வந்த துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், ‘‘கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூடி, வேட்பாளரை தேர்வு செய்யும்’’ என்றார். இதை யடுத்து, உடனடியாக சசி கலாவை தலைவராகக் கொண்டு ஆட்சிமன்றக் குழு அமைக்கப் பட்டது.
இதுதொடர்பாக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் வெளி யிட்டுள்ள அறிவிப்பில், ‘‘அதிமுக ஆட்சிமன்றக் குழு தலைவராக கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா இருப்பார். அவைத் தலைவர் கே.ஏ.செங்கோட்டையன், துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் அ.தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி, மருத்துவ அணி செய லாளர் பி.வேணுகோபால், சிறுபான் மையினர் நலப்பிரிவு தலைவர் ஏ.ஜஸ்டின் செல்வராஜ் ஆகி யோர் அதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்’’ என்று தெரி வித்துள்ளார்.
ஆட்சிமன்றக் குழு தலைவரான சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். எனவே, குழு உறுப்பினர்கள் சேர்ந்து வேட் பாளரை தேர்வு செய்வார்கள். சசி கலாவின் ஒப்புதல் பெற்ற பிறகு, அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.