ஆர்.கே. நகர் தேர்தலில் ஆதரவு கேட்டு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், தனது அணி வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவு கேட்பதற்காக இன்று காலை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார்

ஜெயலலிதா மறைவையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில், 12-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதில், இரண்டாகப் பிளவுபட்டுள்ள அ.தி.மு.க-வில், டி.டி.வி.தினகரன் (அ.தி.மு.க அம்மா), மதுசூதனன் (அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா) இரு அணிகளாகப் போட்டியிடுகின்றனர். இதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியின் சார்பாகப் போட்டியிடுகிறார், மதுசூதனன். தீவிர பிரசாரத்தில் இரு அணியினரும் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், தனது வேட்பாளரான மதுசூதனனுக்கு ஆதரவு கேட்டு, இன்று காலை 11.00மணி அளவில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்தார், ஓ.பன்னீர் செல்வம்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாசனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.