- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்; யாருக்கும் ஆதரவு கிடையாது: விஜயகாந்த்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாகவும் யாருக்கும் ஆதரவில்லை என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக இன்று (செவ்வாய்க்கிழமை) விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து அவரிடம் வினவினர் அதற்கு, “ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது. இந்த தேர்தலில் நாங்கள் யாருக்கும் ஆதரவு கொடுக்கமாட்டோம். ஆர்.கே.நகரில் பணபலம் உள்ளவர்களே வெற்றி பெறுவார்கள்.
தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க மாலை 5 மணிக்கு மேல் பிரசாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும். அப்படி கட்டுப்பாடு விதித்தால், பணப்பட்டுவாடா செய்பவர்களே அந்தக் கட்டுப்பாட்டை விமர்சிப்பார்கள்” என்று கூறினார்.
வழக்கமான பரிசோதனை..
விஜயகாந்த் சிகிச்சை குறித்து சில தினங்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்ட அக்கட்சி, “தேசிய முற்போக்கு திராவிடக் கழக நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் விஜயகாந்த் ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக செல்வது வழக்கம். அதேப்போல இந்த ஆண்டும் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு ஒருவாரத்துக்குள் செல்லவுள்ளார்” எனத் தெரிவித்திருதது குறிப்பிடத்தக்கது.