ஆர்.கே.நகரில் பாஜக மாற்றத்தை ஏற்படுத்தும்: கங்கை அமரன்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆர்.கே.நகரில் அந்த மாற்றம் பாஜக மூலம் ஏற்படும் என்று அத்தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் இசையமைப்பாளரும், பாஜக வேட்பாளருமான கங்கை அமரன் கூறியதாவது:

பிரதமர் மோடியின் கொள்கை, திட்டங்கள்தான் என்னை ஈர்த்தன. பாஜகவில் இணைந்ததை வாழ்வின் பெரும் பாக்கியமாக கருதுகிறேன்

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ஆர்.கே.நகரில் அந்த மாற்றம் பாஜக மூலம் ஏற்படும். தமிழக பாஜகவின் எழுச்சிக்கான ஆரம்பமாக இந்தத் தேர்தல் அமையும். ஆர்.கே.நகரில் எனது வெற்றி உறுதி.

சட்டப்பேரவையில் எந்த எண் கொண்ட இருக்கையில் அமரப் போகிறேன் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறேன். மக்கள் பிரச்சினைகளை முன்வைத்தும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறியும் பிரச்சாரம் செய்வேன்” என்று கங்கை அமரன் கூறினார்.