ஆர்சனிக் ஆல்பம் 30 – கொரோனாவிலிருந்து காத்து கொள்ள ஹோமியோபதி மருந்து

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளவும் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ‘ஆர்சனிக் ஆல்பம் 30′ என்ற ஹோமியோபதி மருந்தினை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்கின்றனர்

நாடு முழுவதும் கொரோனா பரவலால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா பாதிக்காமல் தடுக்க ஆர்செனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தினை ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

அதன்படி தும்மல், இருமல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் இருந்தால் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம். நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை 3 மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். 3 நாட்கள் எடுத்துக் கொண்டாலே போதுமானது. அடுத்தடுத்த வாரங்களில் வாரத்தில் ஒரு நாள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதும்’ இவ்வாறு இந்திய ஹோமியபதி மருத்துவக் குழுவின் திருச்சி கிளை செயலர், மருத்துவர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

latest tamil news

இதன் மூலம் சளி, இருமல், நுரையீரல் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். கொரோனா வைரசுக்கு எதிராக போராட இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும். பக்கவிளைவுகள் இல்லாத மருந்து என்று சொல்லப்படுகிறது. மத்திய அரசு மட்டுமின்றி கேரளம், குஜராத், ஆந்திரம், மணிப்பூர், புதுடில்லி உட்பட்ட மாநில அரசுகளும் இந்த ஹோமியோபதி மருந்தினை பரிந்துரை செய்துள்ளன.தமிழக அரசும் அண்மையில் ஆரோக்கியம் திட்டத்தில் இந்த மருந்தினை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.