ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்

டில்லி சட்டசபைத் தேர்தலf ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இந்த வெற்றிக்குப் பின்னால் பிரசாந்த் கி ேஷார் இருப்பதாக பேசப்படுகிறது.

 

 

இந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டில்லி மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.

 

இந்த பதிவின் பின்னுாட்டத்தில், ‘பிரசாந்த் கி ே ஷாரின் ஆலோசனை தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணம். தி.மு.க.,வுடன் பிரசாந்த் கைகோர்த்துள்ளதால், வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றி பெறுவது உறுதி’ என, தி.மு.க.,வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

ஆனால், ‘என்ன தான் வியூகம் வகுத்தாலும், ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க., ஆட்சியைப் பிடிக்காது. நீங்கள் விஜய்யை தி.மு.க., தலைவர் ஆக்குங்கள். அவர் வெற்றி பெருவார். தி.மு.க., தலைவர் விஜய்’ என, விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

தி.மு.க., வாழ்த்து

இந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘டில்லியில் மீண்டும், பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை விட, வளர்ச்சி தான் முக்கியம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது,” என, டுவிட்டரில் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.