- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து : அமெரிக்க அதிபர் டிரம்ப்
ஆப்கன் உடனான அமைதிப் பேச்சுவார்த்தையை ரத்து செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவிற்க பல அமெரிக்கர்களின் உயிர்களை விலையாக கொண்டுக்க வேண்டி இருக்கும் என அமெரிக்காவை தாலிபன்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் தாலிபன் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்க வீரர் உள்ளிட்ட 11 பேர் உயிரிழக்க காரணமான பயங்கரவாத தாக்குதலுக்கு பின் பேச்சுவார்த்தையை ரத்து செய்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு பதிலடி கொடுக்கம் விதமாக தாலிபன்கள் அறிக்கை ஒன்றைய வெளியிட்டுள்ளனர்.
அதில், “ஆப்கானில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு இருக்கும் வரை எங்களின் தாக்குதல் தொடரும். டிரம்பின் இந்த செயல் அமெரிக்காவில் பல இழப்புக்களை ஏற்படுத்தும். அமெரிக்காவின் அமைதிக்கு எதிரான நிலைப்பாடு இதன் மூலம் உலகிற்கு விளக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்களும், பொரு இழப்புக்களும் இனி அதிகமாகும்”. இவ்வாறு தாலிபன்கள் தெரிவித்துள்ளனர்.