அர்ஜூன் மகேந்திரன் அரச பதவிகள் ஏதும் வகிக்கவில்லை: ரங்க கலன்சூரிய

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், தற்போது எந்தவிதமான அரச பதவிகளையும் வகிக்கவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றச்சாட்டப்பட்டுள்ள, முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், மத்திய வங்கியின் ஆலோசகராக மீண்டும் செயலாற்றுகின்றார் என்று ஊழலுக்கு எதிரான முன்னணி குற்றஞ்சாட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய, ‘மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நிதியமைச்சின் ஆலோசகராக செயற்படுவது உண்மையற்ற விடயமாகும். அவர் அரசாங்கத்தில் எந்தவொரும் பதவிலும் இல்லை’ என்றுள்ளார்.