- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

அரச குடும்ப வாழ்க்கையை துறந்த இளவரசர் ஹாரி-மேகன் பிரிட்டனிலிருந்து புறப்பட்டனர்
அரச குடும்ப வாழ்க்கையை துறந்த இளவரசர் ஹாரி பிரிட்டனிலிருந்து புறப்பட்டார். தன் மனைவி மற்றும் குழந்தையுடன் கனடாவில் தங்கியிருக்க முடிவு செய்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த ராணி எலிசபெத்தின் பேரன் ஹாரி 35. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகையான மேகன் 38 என்பவரை திருமணம் முடித்தார். இவர்களுக்கு ஆர்ச்சி என்ற எட்டு மாத ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில்அரச குடும்ப வாழ்க்கையில் இருந்து வெளியேறுவதாக ஹாரியும் மேகனும்சமீபத்தில்அறிவித்தனர். ஹாரியை சமாதானப்படுத்த ராணி எலிசபெத் மேற்கொண்ட முயற்சிதோல்வி அடைந்தது.இதையடுத்து ஹாரி இளவரசர் பட்டத்தை துறந்து விட்டதாகவும் பொதுமக்கள் வரிப் பணத்தை அவரும் அவரது மனைவியும் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் பக்கிங்காம் அரண்மனைஅறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த ஹாரி ‘மிகுந்த வருத்தத்துடன் தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால் இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை’ என நேற்று முன்தினம் அறிவித்தார்.
இந்நிலையில் ஹாரி பிரிட்டனில் இருந்து நேற்று புறப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது கனடா நாட்டில் தங்கியிருக்கும் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் அடுத்த சில மாதங்களுக்கு அவர் வசிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.