- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்

அரசியல் வேண்டாம் ஆளை விடுங்க – நடிகர் அஜித்
‘எனக்கு நேரடியாக வோ, மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில், எந்த ஆர்வமும் இல்லை’ என, நடிகர் அஜித் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
என் படங்களில், அரசியல் சாயம் வந்து விடக்கூடாது என்பதில், மிகவும் தீர்மானமாக இருக்கிறேன். என் தொழில், சினிமாவில் நடிப்பது மட்டுமே. அதனால் தான், சில ஆண்டு களுக்கு முன், ரசிகர் இயக்கங்களை கலைத்தேன்.என் முடிவுக்கு பிறகும், சில அரசியல் நிகழ்வுகளுடன், என் பெயரையோ அல்லது என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி, சில செய்திகள் வருகின்றன.
தேர்தல் வரும் நேரத்தில், இத்தகைய செய்திகள், எனக்கு அரசியல் ஆசை வந்து விட்டதோ என்ற சந்தேகத்தை, பொது மக்களிடம் ஏற்படுத்தும்.எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அரசியல் ஈடுபாட்டில், எந்த ஆர்வமும் இல்லை. சராசரி பொது ஜனமாக, வரிசையில் நின்று, ஓட்டளிப்பது மட்டுமே, என் உச்சகட்ட அரசியல் தொடர்பு.என் ரசிகர்களை, குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என்றோ, ஓட்டு போட வேண்டும் என்றோ, நான் எப்போதும் நிர்ப்பந்தித்தது இல்லை; இனியும், நிர்ப்பந்திக்க மாட்டேன்.
நான் சினிமாவில், தொழில் முறையாக வந்தவன். அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ, நான் வரவில்லை. என் ரசிகர்களுக்கும், அதையே தான் வலியுறுத்துகிறேன். சமூக வலைதளங்களில் தரமற்ற முறையில், மற்றவர்களை விமர்சிப்பதை, நான் என்றுமே ஆதரித்ததில்லை. அரசியலில், எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை, நான் யார் மீதும் திணிப்பது இல்லை; மற்றவர்கள் கருத்தை, என் மேல் திணிக்க விட்டதும் இல்லை.
உங்கள் அரசியல் கருத்து, உங்களுடையதாகவே இருக்கட்டும். என் பெயரோ, என் படமோ, எந்த ஒரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை, நான் விரும்பவில்லை. இவ்வாறு, அஜித் கூறியுள்ளார்.