அரசியல் சூழல்: ட்விட்டரில் அரவிந்த்சாமி – மாதவன் அலசல்

தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து ட்விட்டர் தளத்தில் அரவிந்த்சாமி மற்றும் மாதவன் அலசி விவாதித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலில் இன்று மிக முக்கியமான நாளாகும். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று அறிவித்து, 4 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

அரசியல் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் அரவிந்த்சாமி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு “நமது காபந்து முதல்வர் இன்று அலுவலகம் சென்று மற்ற எம்.எல்.ஏக்களுக்கு உதாரணமாக திகழ வேண்டும் என விரும்புகிறேன். முதலில் மக்கள், பிறகுதான் அரசியல்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

அரவிந்த்சாமியின் ட்வீட்டை மேற்கோளிட்டு மாதவன், “நம்பிக்கையையும், இயல்பு வாழ்க்கையும் பழைய மாதிரி கொண்டு வருவதற்கான நேரம். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய, தமிழக அரசின் மீதுள்ள நம்பிக்கையை மீட்டெடுப்பதில் உறுதிகொள்ள வேண்டிய நேரம்” என்று தெரிவித்துள்ளார்.