அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும் ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கிடப்பதாக நடிகர் கமலஹாசன் பேட்டி அளித்திருந்தார். இதற்கு எதிராக அமைச்சர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சண்முகம் மற்றும் சிலர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். பா.ஜனதா தலைவர்களும் கமலஹாசனை விமர்சித்து உள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க கமல் ரசிகர்கள் முடிவு செய்தனர். அதன்படி மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல்வேறு கண்டன சுவரொட்டிகளை ரசிகர்கள் ஒட்டி வருகிறார்கள். மதுரை நகரிலும் கமல் ரசிகர் மன்ற சுவரொட்டிகள் ஒட்பப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சுவரொட்டிகள் ஒட்டும் செலவு நற்பணிக்கு போகட்டும். நாடு காக்கும் நற்பணிக்கு மட்டுமே ரசிகர்கள் தேவை. அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க நானே போதும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.