அரசியலில் எழுச்சி பெற குலதெய்வம் கோயிலில் ஓ.பி.எஸ். வழிபாடு

இரட்டை இலை சின்னத்தை கைப் பற்ற வேண்டியும், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் தனது ஆதரவு வேட்பாளர் வெற்றி பெற வேண்டியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது குலதெய்வமான வனப்பேச்சியம் மன் கோயிலில் சிறப்புப் பூஜை செய்தார். முன்னதாக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அசுவமேத பூஜை நடத்தினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியாகவும் செயல்படுகின் றனர்.

இதனிடையே ஜெயலலி தாவின் அண்ணன் மகள் தீபாவும் தனியாக பேரவையை தொடங்கி அரசியலில் குதித்துள்ளார். இந் நிலையில், ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் ஏப்.12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் அரசியல் மற்றும் சொந்த வாழ்க்கையில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு முன்பு திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செண்பகத் தோப்பு பகுதியில் உள்ள தனது குலதெய்வம் வனப்பேச்சி யம்மன் கோயிலுக்கு வந்து வழி படுவது வழக்கம்.

இந்நிலையில், திருவில்லிபுத் தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று காலை அவர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கோ பூஜை, அசுவமேத பூஜை செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வம், சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டுச் சென்றார்.

பின்னர் செண்பகத்தோப்பில் உள்ள வனப்பேச்சியம்மன் கோயி லுக்குச் சென்றார். வனப்பேச்சியம்மனுக்கும், பரிவார தேவதைகளுக் கும் சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டார்.

அரசியலில் எழுச்சிப் பெற வேண்டியும், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல், இரட்டை இலை சின்னம் உட்பட பல்வேறு பிரச்சி னைகளில் வெற்றி பெற வேண்டியும் ஓ.பி.எஸ். சுவாமி தரிசனம் செய்ததாக அவரது ஆதரவாளர் கள் கூறுகின்றனர்.