அரசியலிலிருந்து விலக சுமந்திரனுக்கு காலம் கனிந்துள்ளது என்கிறார் சிவசக்தி ஆனந்தன் எம்.பி

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கு வதாக சுமந்திரன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றிக் கொள்வதற்கு காலம் கனிந்துள்ளதென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழி லாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வலியுறுத்தி, கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் சிவசக்தி ஆனந்தன் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள் ளார்.
அவர் மேலும் கூறுகையில்,

“வடக்கு கிழக்கில் பெரும் ஆதரவுடன் இவ் அரசாங்கம் எவ்வாறு வந்திருந்ததோ, அதேபோன்றுதான் மலையக மக்களும் ஆதரவு வழங்கியிருந்தனர்.
ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்கம் நிலை தடுமாறி ஒரு நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆகவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங் கிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மேலும் இன்று மகிந்த ராஜ பக்ஷ பிரதமராக வருவதற்கு முக்கிய காரணம், நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே ஆகும்.

இந்நிலையில் சுமந்திரன் போன்றோர் அரசியல் தீர்வு வராவிடிவின் அரசியல் அரங்கிலிருந்து ஒதுங்குவதாக தெரிவித்திருந்தனர். ஆகவே அதனை நிறை வேற்றிக்கொள்ள இதுவே சிறந்த தருணமாகும்.

நல்லாட்சி அரசாங் கத்தில் இப்புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவ தாக சொன்ன சுமந்திரன், இவ் அரசாங்கம் பிளவுபட்டு போயுள்ள நிலையில் அவரு டைய வாக்கினை நிறை வேற்றி கொள்ளும் முகமாக அரசியலில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும்.
இதேவேளை எங்களு டைய மத்திய குழு கூடி, நாட்டில் தற்போது ஏற்பட் டுள்ள குழப்ப நிலை தொடர் பாக ஆராயவுள்ளது. எங் களைப் பொறுத்தவரை இந்த இரண்டு பிரதான கட்சிகளும், தமிழ் மக்களு க்கு கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறை வேற்றாத ஒரு கால கட்டத் திலேயே உள்ளது.

ஆகவே இவர்களுக்கு நிபந்தனை விதித்தோ, விதிக்காமலோ எதையும் செய்யப் போவதில்லை. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் பதவியை தக்க வைப்பதற்காகத்தான் இந்த அரசாங்கத்திற்கு நிபந்த னையற்ற ஆதரவை சம்பந்தன் வழங்கி வந்தார். ஆனால் இன்று அவருடைய எதிர்க்கட்சி பதவியும் பறிபோயுள்ளது. இந்நிலையில் எமது மத்திய குழுவும் இவ்விடயம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ளது” என சிவசக்தி ஆனந்தன் தெரி வித்துள்ளார்.