- தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் விவசாயிகள் டிராக்டர் பேரணி கலவரத்தில் பங்கேற்றாரா ?
- முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்குப் போய் அங்கு வழங்கப்பட்ட விபூதியை பூசிக் கொள்ளாமல் கீழே கொட்டி அவமானப்படுத்திய ஸ்டாலின்
- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

அயோத்தி ராம ஜென்மபூமியை போல் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி வேண்டும்
அயோத்தி ‘ராம ஜென்மபூமி’ இயக்கத்தைப் போலவே, மதுராவில் ‘கிருஷ்ண ஜென்மபூமி’ இயக்கமும் தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்த இந்து ஆர்மி எனும் அமைப்பின் 22 உறுப்பினர்கள் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயில் வளாகத்தை ஒட்டி அமைந்துள்ள ஷாஹி இட்கா மசூதி இடிக்கப்பட வேண்டும் என்று சில சங்கப் பரிவார அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன.
கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் தொடங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி மதுரா நகரம் முழுவதும் பதாகைகள் ஒட்டிய இந்து ஆர்மி அமைப்பு இந்துத்துவ ஆதரவாளர்கள் அனைவரும் திங்கள் காலை 11 மணிக்கு அந்த இடத்தில் கூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது.
அயோத்தி பாபர் மசூதி இடிப்பின் 4 முக்கிய இந்துத்துவ முகங்கள்
அயோத்தி முதல் இஸ்தான்புல் வரை: மத வழிபாட்டுத் தலங்களின் அரசியல்
கிருஷ்ண ஜென்மபூமி இயக்கம் தொடங்கப்பட்டால், 2022ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக அமையும்.