அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

லக்னோ: உ.பி. மாநிலம் அயோத்தியில் 2 லட்சம் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ள உள்ளார்

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உபி., மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமான வகையில் தீபாவளி கொண்டாட மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து இன்று அயோத்தியில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது 2 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. முன்னதாக ராமர், சீதை, லட்சுமணர் வேடம் அணிந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டனர்.

இது குறித்து பா.ஜ. வட்டாரங்கள் கூறுகையில்.உ.பி.யில் பா.ஜ. 14 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது. ராமாயணத்தில் ராமர் 14 ஆண்டுகள் வனவாசம் சென்று திரும்பினார். இதையெல்லாம் கொண்டாடும் விதமாக தான் தற்போது உபி.யில் பா.ஜ. ஆட்சி நடப்பதால் அதனை கொண்டாடவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அயோத்தியில் ராமர் கோயில் அருகே தெப்பக்குளம் புனரமைக்கப்பட்டு நேற்று இரவு தெப்ப உற்சவம்நடந்தது.