- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு அழைத்தாலும் நான் செல்ல மாட்டேன் – யோகி ஆதித்யநாத்
ராமர் கோவிலுக்கு, அயோத்தியில் கடந்த 5ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். விழாவில் உ.பி., முதல்வர் யோகி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் ஆகியோர் கலந்து கொண்டனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, மசூதி கட்டுவதற்கு, அயோத்தியில் தன்னிபூர் என்ற இடத்தில், 5 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான பொறுப்பு, உ.பி., மாநில சன்னி மத்திய வக்போர்டு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உ.பி., முதல்வர் யோகி ஆத்யநாத் அயோத்தி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிக்கு பின் அளித்த பேட்டி விவாதத்தை கிளப்பி உள்ளது. பேட்டியில் அவர் கூறியதாவது: ஒரு முதல்வராக என்னிடம் கேட்டால் எந்த மதத்துடனும், சமூகத்துடனும் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை. ஆனால் ஒரு யோகியாக கேட்டால், அயோத்தியில் மசூதி துவக்க விழாவுக்கு நான் போக மாட்டேன். எனெனில், ஒரு ஹிந்துவாக எனது வழிபாட்டு முறையைப் பின்பற்ற எனக்கு உரிமை உண்டு. அயோத்தியில் மசூதிக்கு அடிக்கல் நாட்டும் விழாவுக்கு என்னை அழைக்க மாட்டார்கள். அப்படி அழைத்தாலும் நான் போக மாட்டேன்.
அவர்கள் என்னை அழைத்தால் பலரது மதச்சார்பின்மைக்கு ஆபத்து வரும். அவ்வாறு நடக்கக்கூடாது என்பதே என் விருப்பம். பாகுபாடு இல்லாமல், அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும். அதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன்.
தொப்பி அணிந்துகொண்டு இப்தார் விருந்தில் கலந்துகொள்வது மட்டும் மதச்சார்பின்மை ஆகாது. அதை நாடகம் என்று மக்களும் அறிவார்கள். மக்களுக்கு உண்மை என்ன என்பது தெரியும். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு காங்., சமாஜ்வாடி செய்தித் தொடர்பாளர்கள், கடுமையாக விமர்சித்துள்ளனர்.
சமாஜ்வாடி செய்தி தொடர்பாளர் பவான் பாண்டே கூறுகையில், ‘யோகியின் பேச்சில் கண்ணியக்குறைவு உள்ளது. அவர் இந்து மக்களுக்கு மட்டுமல்ல, மாநிலத்துக்கே முதல்வர். மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார்.
உ.பி., காங்., செய்தி தொடர்பாளர் பேசுகையில், ‘போலி ஹிந்துத்துவம் பெயரில் அரசியல் விளையாட்டு நடக்கிறது. கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். ராமரை தங்களுக்கு உரியவராக பா.ஜ., நினைக்கிறது’ என்றார். யோகியின் இப்பேச்சு அதிக விவாதத்தை கிளப்பி உள்ளது.