அம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம்

ஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான், உலக சினிமா வியந்து பார்க்கும் அளவுக்கு இன்று வளர்ந்து விட்டார். ஆனாலும் என்றைக்குமே தான் ஒரு மிகப்பெரிய இசைமைப்பாளர் என்ற பந்தா அவரிடம் கிடையாது.

இந்நிலையில் தன் அம்மா தனக்கு ஆரம்ப காலத்தில் பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 1986ம் ஆண்டு போர்டு கீ ப்ளேயராக இருந்த போது அம்பாஸிடர் காரை வாங்கி கொடுத்துள்ளார், ஆனால் இந்த காரை பராமரிக்க முடியாத நிலையில், ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடைக்குப் போடும் நிலையில் காணப்படுகிறது.

இந்தக் கார் படத்தைப் போட்டு, ‘என் அம்மா 1986ல் எனக்காக வாங்கித் தந்த முதல் கார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும், உங்களது அம்மா கொடுத்த பரிசை இப்படியா வைத்துக் கொள்வது? நன்றாகப் பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்,” என்ற ரீதியில் கமெண்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.