அம்பேத்கரை மதிக்காத காங்.,: பிரதமர் மோடி தாக்கு

நமோ ஆப் மூலம் பா.ஜ., தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது: பா.ஜ.,வை சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மக்களை சந்தித்து, அரசின் கொள்கைகள் எடுத்து சொல்ல வேண்டும். அவர்களுக்காக பா.ஜ., அரசின் உழைப்பு குறித்து விளக்க வேண்டும். ஆட்சியில் இருந்த வரை காங்கிரஸ் அம்பேத்கரை மதித்தது கிடையாது. அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

பா.ஜ., அரசு, தாழ்த்தப்பட்டவர்களுக்கான சட்டத்தை இன்னும் வலிமையாக்கியுள்ளது. இதர பிற்படுத்தப்பட்டோர் சமுதாய கமிஷனுக்கு அரசியல் சாசன அந்தஸ்து கொடுப்பதை தடுக்கவே, காங்கிரஸ் பார்லிமென்டை செயல்படுவதை தடுத்தது. வலிமையான மற்றும் வளர்ச்சியடைந்த நாடு என்ற அம்பேத்கரின் கனவை நிறைவேற்ற கடுமையாக உழைக்கிறோம். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எம்.பி.,க்கள் அதிகளவில் பா.ஜ.,வில் தான் உள்ளனர். அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.