அமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படுகின்ற பாதுகாப்பையும் விட கூடுதலாகக் கொண்ட சுமந்திரன் எம்பியின் “செயற்பாடுகள்” கனடாவரை நீளுகின்றனவா?

“ஒரு அமைச்சருக்கு வழங்கக் கூடிய பாதுகாப்பினையும் விட கூடிய பாதுகாப்பு எதிர்க்கட்சி தலைவரான திரு சம்பந்தன் அவர்களுக்கும் கூட்டமைப்பின் பேச்சாளராக விளங்கும் திரு சுமந்திரனுக்கும் உள்ளது என்பது உலகம் அறிந்தவிடயமாகும். அதுவும் இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான கோவைகளில் மிகவும் அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு இராஜதந்திர “ஏற்பாடு” போலவும் காணப்படுகின்றது.

அவருக்கு வழங்கப்பட்டுள்ள காரணங்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரதமர அலுவலகம் பின்வருமாறு தெரிவிக்கின்றது “தமது சொந்த மக்களைசு மந்திரன் சந்திக்க முடியாது, அவ்வாறு சந்தித்தால் அவர் தாக்கப்படும் சந்தர்ப்பங்கள்; அதிகமாக உள்ளன. எனவே இந்த நிலையில், அவர்களைப் பாதுகாப்பதற்கு இவ்வாறான பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன” என்று கூறுப்படுகின்றது இவ்வாறான நிலைமை அங்கு உள்ள தெனில்; எந்தளவிற்கு செல்வாக்கு மிக்கவர்களாக இந்த அரசுடன் இருக்கின்றார்கள் என்பதனை மக்கள் விளங்கிக்கொள்ள முடியும்.”

கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனுக்கு அமைச்சுப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளமை தொடர்பில் இதன்போது ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு அங்கம், அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்பட்டதோ, இல்லையோ, தமது சொந்தக் கட்சியில் உள்ள அமைச்சர்களுக்கு மேலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தினை நல்லாட்சி அரசாங்கம் வைத்திருக்கின்றதென்பது அனைவரும் அறிந்த விடயம்.

இந்த அரசாங்கத்தில் மட்டு மன்றி, கடந்த அரசாங்கத்திலும் 3ஆவது அதி உயர் பாதுகாப்புக்கள் அப்போதைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், நீலம் திருச்செல்வத்திற்கும் வழங்கப்பட்டிருந்தது. அரசாங்கத்திற்கு எதிராக போராடி உரிமைகளைப் பெற்றுக்கொள்கின்றோம் எனக் கூறிக்கொண்டு மக்கள் மத்தியில் சென்று வாக்குகளைக் கேட்கின்றார்கள். ஆனால், அந்த அரசாங்கம் தான் அவர்களை அதிகமாக பாதுகாப்பதற்கு விரும்புகின்றது. யார் அரசாங்கத்துடன், எந்தக் கோணங்களில் இருக்கின்றார்கள் என்பது பற்றி மக்கள் விளங்கிக்கொள்வார்கள். இந்த விடயங்களை காலம் தாழ்த்தி ஊடகங்கள் தெரிவிப்பது தர்மத்திற்கு முரணானது என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

வுpரைவில் நடை பெறவுள்ள உள்;ராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் பல உள்;ராட்சி மன்றங்களுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுததபோது, தேவையற்ற வகையில் அதற்குள் தனது “மூக்கை” நுளைத்து நேர்மையான கட்சித் தொண்டர்கள் மத்தியில் பல குழப்பங்களையும் அவர்கள் விரக்தியடையும் நிலையையும் ஏற்படக் காரணமாக இருந்துள்ளார். இதற்கான பலஆதாரங்கள் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் பலரிடம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க ,திரு சுமந்திரன், ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதற்குப் பின்னர்தான், இலங்கையில் தமிழர் அரசியலில் மிகவும் வேண்டப்படாத விடயங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அதற்கு மேலாக அவர் கனடாவில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழ்ந்து வருவதால், கனடா நோக்கி தனது கைகளை நீட்டிய வண்ணம் உள்ளார் என்பது நன்கு புலனாகின்றது.
ஆரம்பத்தில்  “தீபம்” என்னும் வாரப்பத்திரிகையை கனடாவில் பதிப்பிக்கச் செய்து அதன் இலங்கைப் பதிப்பிற்கு தேவையான நிதியைப் பெற்றுக்கொடுப்பதிலும் இவருக்:கு அதிகம் பங்களிப்பு இருந்தது. ஆனால் அந்த“தீபம்”: இங்கு தொடர முடியாமல் போய்விட்டது. சுமந்திரனின் கனவு பலிக்காமல் போய்விட்டது. ஆனாலும், சுமந்திரன் இன்னும் கனடா நோக்கிய தனது பாய்ச்சலைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார், எதிர்வரும் ஆண்டில் நாம் இந்த பாய்ச்சலின் தாக்கங்களை தெரிந்து கொள்ளமுடியும்.