அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக்: சௌதி இளவரசர் மறுப்பு

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் மொபைல் போனை ஹேக் செய்து சவுதி சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உளவுபார்த்ததாக வெளியான செய்தியை, சவுதி அரசு மறுத்துள்ளது.

இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தி : கடந்த 2018 ம் ஆண்டு மே1 அன்று, ஜெப் பெசோசும், முகமது பின் சல்மானும் நட்பு அடிப்படையில் வாட்ஸ் ஆப் செயலி மூலம் தகவல்களை பகிர்ந்துள்ளனர். அப்போது, பெசோசுக்கு வைரஸ் உள்ள வீடியோ ஒன்றை சல்மான் அனுப்பியுள்ளார். அதன் பின் ஒரு மணி நேரத்தில், பெசோஸ் போன் ஹேக் செய்யப்பட்டு தகவல்கள் எடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக பெசோசின் பாதுகாப்பு பொறுப்பாளர் கூறும் போது, பெசோசின் மொபைல் போனில் இருந்து பல தகவல்களை சவுதி அரசு எடுத்துள்ளது. மொபைல்போனில் சவுதி ஊடுருவியது எங்களுடைய விசாரணை அதிகாரிகள் மற்றும் பல வல்லுநர்கள் உறுதிபடுத்தியுள்ளனர் என்றார். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதனை மறுத்துள்ள சவுதி அரசு, ஜெப் பெசோசின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டதன் பின்னணியில் சவுதி உள்ளதாக வெளியான தகவல்கள் அபத்தமானது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். அப்போது தான் இது தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வர முடியும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.