அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு

வாஷிங்டன்: அமெரிக்காவில், பள்ளி ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலர் காயம் அடைந்தனர்.அமெரிக்காவில், சமீபகாலமாக, பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. புளோரிடா மாகாணத்தில், ஒரு பள்ளியில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், ௧௪ பேர் இறந்தனர்.

இதையடுத்து, வேகமாக பரவி வரும், துப்பாக்கி கலாசாரத்தை தடுக்க கோரி, நாடு தழுவிய அளவில், மாணவர்கள் இன்று பேரணி நடத்த உள்ளனர்.இந்நிலையில், மேரிலாண்ட் மாகாணத்தில் ஒரு பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில், பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பின், பள்ளி மூடப்பட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும், பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில், எத்தனை பேர் காயமடைந்தனர், துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என்பது போன்ற விரிவான தகவல்கள் வெளியாகவில்லை.