அமெரிக்க தேர்தலை தாமதப்படுத்தலாம்: டிரம்ப் டுவிட்டரில் கருத்து

அமெரிக்க தேர்தலில் இ- மெயில் ஒட்டளிப்பு முறையில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதால் தேர்தலை தள்ளி வைக்கலாம் என அதிபர் டிரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்தாண்டு ( நவம்பர்) இறுதியில் நடக்கிறது. அமெரிக்காவை ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு, பொருளாதார பிரச்னை போன்றவற்றால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் ஓரிரு மாகாணங்களில் பிரைமரி தேர்தலில் இ- மெயில் மூலம் ஓட்டளிக்க அனுமதிப்பட்டது. இதில் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் ஜோபிடன் அபார வெற்றி பெற்றார்.

இது போன்று ஓட்டுச்சாவடிக்கு நேரில் வந்து ஓட்டளிக்காமல் ‘இ – மெயில்’ மூலம் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்ட முறை வெற்றி அடைந்துள்ளதால் எதிர்கால தேர்தல்களுக்கு இது, ஒரு புதிய வழியை ஏற்படுத்தி தரும் என்ற கருத்து பரவலாகி வருவதாக கூறப்பட்டது.

இது குறித்து அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறப்பட்டுள்ளதாவது: இ. மெயில் ஓட்டளிப்பு முறை 2020 அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிகவும் தவறான மற்றும் மோசடியான தேர்தலாக அமைந்துவிடும். இது தேசத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். முறையாக பாதுகாப்புடன் நேரில் வந்து மக்கள் ஓட்டளிக்கும் வரை தேர்தலை தாமதப்படுத்தலாம். இவ்வாறு அவர் பதவிவேற்றியுள்ளார்.