- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை
- உலகம் செய்தி பிலிப் இறுதி ஊர்வலத்தில் ஹாரி; வியப்பில் பிரிட்டன் மக்கள்
- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

அமெரிக்கா விமான நிலையத்தில் சோதனைக்குள்ளாக்கப்பட்ட பாக். பிரதமர்
பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் தரப்பில், “பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக அமெரிக்காவுக்கு சென்றிருந்தப்போது நியூயார்க் விமான நிலையத்தில் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் மெத்தன போக்கை அமெரிக்கா கடந்த சில மாதங்களாகவே கண்டித்து வந்தது. இதன் கராணமாக அமெரிக்கா – பாகிஸ்தான் உறவில் லேசான விரிசல் ஏற்பட்ட நிலையில், விமான நிலையத்தில் அப்பாஸி மீதான இந்தச் சோதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் கூறும் போது, ”அப்பாஸி எளிமையானவர். பிற பயணிகளுக்கு எந்த நடைமுறை உள்ளதோ அதையே அவரும் பின்பற்றினார்” என்று கூறியுள்ளார்.
எனினும் அமெரிக்கா இது தொடர்பாக கருத்து ஏதும் இதுவரை தெரிவிக்கவில்லை.
அப்பாஸி சோதனைக்கு உள்ளாக்கப்படும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.