- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

அமெரிக்காவை நெருங்கும் பயங்கர புயல்
அதிபயங்கரமான புயல் சின்னம் அமெரிக்காவை நெருங்கி வருவதாக வானியல் துறை எச்சரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 10 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஃப்ளோரன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் புயல் இன்னும் சில நாட்களில் அமெரிக்காவின் வடக்கு மற்றும் தெற்கு கரோலினா பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக மணிக்கு 215 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும் என்று அமெரிக்க வானியல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடல் பகுதியில் 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.