அமரர் விஜயலட்சுமி சண்முகலிங்கம் (ராணி)

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்:- 26 -09-1948 - மறைவு:- 19-04-2016
எமது குடும்பத்தின் ஒளி விளக்கே! உயிரின் உயிரே அம்மா கரித்துக் கொட்டும் கண்ணீர்த்துளிகள் இரு புறமும் கரை தேடி அலைய தவிக்கின்றோம் உம் முகம் தேடி உடல் தந்தாய், உயிர் தந்தாய் மதி சொன்னாய் அரவணைப்பும் தந்தாய் எம் பாசவிளக்கு பறிபோனது என்று பாரெல்லாம் சொல்லி அழுகின்றோம் எங்கள் அம்மா எங்கள் அம்மா ஆண்டு ஒன்றாகியும் ஆறவில்லை எங்கள் மனம் பாசமுகம் யுகங்கள் தோறும் தொடர ஏங்குகின்றோம் பாசத்தின் பிறப்பிடமே! நேசத்தின் இருப்பிடமே இவ்வுலகம் உள்ளவரை மறவாது உம் நினைவு எங்களது நெஞ்சமதில் உங்கள் நினைவுகளை சுமந்து வாழும் உங்கள் பிள்ளைகள்


உறவின் ஆழம் பிரிவின் வேதனை பணம் இழந்தேன், பதவி இழந்தேன் பாசம் இழந்தேன், நட்பு இழந்தேன் நாட்டையும் இழந்தேன் அப்பொழுதும் நான் நானாக இருந்தேன் தாயே! இன்று உம்மை இழந்தேன் என்னை நானே இழந்தேன் தாயே பிறப்பையும் இறப்பையும் அறிவேன் தாயே நீ இல்லா இவ்வுலகில் வெறுமையும் அறிந்து கொண்டேன் வாழ்வின் உண்மையையும் புரிந்து கொண்டேன் பனித்த கண்களுடன் உங்கள் நினைவுடன் வாழும் அன்புமகன் தீபன்

தகவல்

தொடர்புகளுக்கு தீபன்
416- 721- 3484