Posted on by netultim2

அமரர் பசுபதிபிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்)
31ம் நாள் நினைவஞ்சலியும்
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட
பசுபதிபிள்ளை சோமசுந்தரம் (விசுவலிங்கம்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும், எங்கள் அன்புத்தெய்வமே உங்கள் அன்பு நினைவுகள் என்றும் எங்களை விட்டு நீங்காது உங்கள் ஆத்மா சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்றோம். அன்னார் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து எம்மிடம் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அமரரின் இறுதிக்கிரியைகளின் போது
திருமுறைகள் ஓதிய இந்து குருமார்களுக்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியும், அஞ்சலிப்பிரசுரங்கள்
விநியோகித்தும், மலர்வளையங்கள் சார்த்தியும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள்
குடும்பத்தின் சார்பில் மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் எதிர்வரும் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று 10 Karachi Dr, Markham இல் அமைந்துள்ள இரா(Eraa) Palace மண்டபத்தில் மதியம் 12 மணியளவில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அதனைத்தொடர்ந்து மதிய போசனமும் நடைபெறும் என்பதனை அறியத்தருகின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்