அமரர். திரு. நாகமுத்து முதலாளியப்பா-வல்வெட்டி

ஏழாம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்: 26 - 09 - 1923 மறைவு: 10 - 12 - 2009

திதி: 22-11-2016
ம் இருகண்களாய் இருந்த உங்களை இழந்து இன்று ஏழாண்டுகள் ஆனதப்பா... எம் உள்ளம் அது வேதனைத்தீயில் வெந்து மடிகிறது... ஆறுதல் சொல்ல யாரிருந்தென்ன உங்கள் ஆருயிர் அன்புக்கு ஈடாகுமோ... தாயுமாய், தந்தையுமாய் பாசமே வேதமாய் எம்மை ஆட்கொண்டாய்... முடிவில்லா இவ்வாழ்க்கைச் சக்கரத்தில் முயற்சியால் முனைப்போடு வாழ்ந்தவரே... மண்ணில் நீங்கள் மறைந்தாலும் என்றும் விண்ணில் வாழ்வீர்கள் - என எண்ணுவோம் நினைவலைகளால் தினம் நினைந்துருகும் நாம் உமை என்றும் மறவோம் ... அன்றும் இன்றும் என்றும் எம் நினைவோடு ஒன்றிவிட்ட எம்அருமைத் தந்தையின் ஆத்மா சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். உங்கள் பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.