அமரர். திரு. தம்பிராசா சர்குணாநந்தன்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

திதி: 06-03-2017
தோற்றம்:- 28-02-1962 மறைவு:-16-02-2016
யாழ். உரும்பிராய் கிழக்கு சிவபூதரயர் கோவிலடியை பிறப்பிடமாகவும், கனடா, ஸ்காபுறோவை வதிவிடமாகவும் கொண்ட
அமரர் திரு. தம்பிராசா சற்குணாநந்தன்
அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத்தெய்வமே - எங்கள் அப்பா
ஆண்டொன்று கழிந்தாலும் ஆறவில்லை
எம்மனது ஏக்கத்துடன் காக்கவிட்டு
ஏனப்பா சென்றீர்கள்?
பண்பான வழிகாட்டி
பாசமுடன் வளர்த்து விட்டு
பாரை விட்டுச்சென்றீர்கள்
பாவிகள் நாம் தவிக்கின்றோம்
குறையேதும் இல்லாத நிறைகுடமே
நீங்களப்பா - இறைவன்
குறைவைக்க எண்ணியதால்
ஆயுளைத்தான் குறைத்தானோ
காலம்தானிரூக்க - எம்மைக்
கண்ணீரில் ஆழ்த்திவிட்டு
விண்ணோடு சென்றீர்கள்
வேதனையில் வாடுகின்றோம்...உங்கள் பிரிவால் துயரும் தாய், மனைவி, பிள்ளை, சகோதரர்கள், மற்றும் உற்றார், உறவினர்கள்.

தொடர்புகளுக்கு

சதீஸ்
(647) 204-5949