அமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி (A.C.K)

31ம் நாள் நினைவஞ்சலி

(இளைப்பாறிய பிரதம இலிகிதர், நீர்ப்பாசனத் திணைக்களம் - இலங்கை)

தோற்றம் : 26-05-1918 மறைவு : 07-01-2017
யாழ் திருநெல்வேலியைச் சேர்ந்தவரும், தெகிவளை, கனடா ஆகிய இடங்களில் வசித்து வந்தவருமாகிய அமரர். திரு. ஆறுமுகம் சின்னக்குட்டி கந்தசாமி அவர்களின்

31ம் நாள் நினைவஞ்சலி.

ஐயா!
கண்களைக் கண்ணீர் மறைக்க
கூப்பிட்டகுரல்களும் ஓய்ந்து போக
விடைகொடுத்து இன்றுடன் மாதமொன்று...
உண்மைதான் - ஆனாலும்
ஏற்கவோ கனக்கிறது உள்ளம்
நேற்றும் பார்த்தோம்
அறையினுள் நீங்கள் கட்டிலில் கால் மடித்து
அதற்கு முன்தினமும் எட்டிப்பார்த்தோம்
நடைவண்டியுடன் தளர்வான நடையுடன்
இன்றும் பார்த்தோம்
கதிரையில் அமைதியாக – அதே குழந்தைச் சிரிப்பு
நாளையும் பார்ப்போம்
எங்கள் முன் வழிகாட்டியாக
தொடர்வோம் உங்களை – நீங்கள் தந்த
ஆசியும், ஊக்கமும், பரிவும், பாசமும் இப்படி எத்தனையோ
எம் உள்ளத்தில் கொண்டு!

எமது அருமைத் தந்தையாரின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும், மற்றும் தொலைத்தொடர்பு கொண்டு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கம் இறுதி நிகழ்வுகளின் போது கலந்து கொண்டு சகல வழிகளிலும் உதவியோருக்கும் இன்னும் பல வழிகளிலும் உதவியும், ஒத்தாசையும் புரிந்த உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்;கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
(416) 495-1987