அமரர். செல்வன். தியாகராஜா உமாதேவன்

12ம் ஆண்டு நினைவஞ்சலி

(உமா – மாரீசன்கூடல் – இளவாலை)
மலர்வு 20-11-1978      –    உதிர்வு 30-07-2005

எம்மை மறந்து எங்குதான் போனாயோ – உமா
நினைவிழந்து துடிக்கின்றோம் மீண்டும் வரமாட்டாயோ!
அழியாத உன் நினைவில் ஆண்டு பதினொன்னெறாலும்
உம் நினைவு என்றென்றும் அழியாது – உமா
நாம் எண்ணிய எண்ணங்களும் சொல்லிய மந்திரங்களும்
பொய்யாகி கனவாகி கலைந்ததேனோ!
பண்பின் சிகரமாய் அன்பின் அடிநாளமாய்
எல்லோர் மனங்களிலும் குடிகொண்டாயே – உமா
நீ பிஞ்சிலே உதிர்ந்து போனாலும்
இறைவனின் பேரின்ப வீட்டிலே என்றும் வாழ்வாய்
எங்கள் ஆருயிர் மகனே உமா!!!

எங்கள் அன்புச் செல்வத்தின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
அன்பு அப்பா, அம்மா, அண்ணா, தம்பி, அண்ணிமார், சித்தப்பாமார், மாமன்மார், அன்ரிமார், மைத்துனிமார் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்.