Posted on by netultim2

அமரர். அற்புதம்மா சந்தியாப்பிள்ளை (உயரப்புலம், ஆனைக்கோட்டை)
நீங்காத நினைவுகளுடன் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
அன்புள்ள அம்மா! அன்பால் அரவணைத்து கரங்களில் ஏந்தி கனிவோடு பேசி எமக்காக வாழ்ந்தவரே... உண்மை அன்பின் ஒளியே... இன்னமும் உங்கள் முகம் தேடுகிறோம், வாடுகிறோம். கண்ணை இமை காப்பது போல் - எம்மை காலமெல்லாம் காத்து வந்தீர்களே... கயவர்கள் வந்த வேளையிலும் தனித்து எம்மை இரவும் பகலும் கலங்காது நின்று காத்து வந்தீர்களே... பசிக்காக எமக்கு நீங்கள் பாலூட்டவில்லை பாசத்தையும் வீரத்தையும் உங்கள் பாலில் சேர்த்தெமக்கு ஊட்டியபடி வளர்த்தீர்கள்... அம்மா, நீங்கள் ஊட்டிய பாலினால் இன்று நாம் பாரினிலே நிமிர்ந்து தளைத்து நிற்கின்றோம். ஆண்டுகள் மூன்றென்ன முந்நூறு ஆண்டுகள் சென்றாலும் எம் மூச்சு உள்ளவரை உங்கள் முகத்தை மறவோம், தேடுகிறோம் அம்மா...
என்றும் உங்கள் பிரிவால் துயருறும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.