அமரத்துவமாது. நல்லம்மா வரதராசா – நீலிப்பந்தனை, காரைநகர்)

மரண அறிவித்தல்

தோற்றம்: 11-08-1932 மறைவு: 19-11-2006

திதி: அபரசதுர்த்தசி 27-11-2016
பத்தாண்டு தான்மறைந்தும் பாசமாம் உம்நினைவு எத்தாலும் நீங்காது எம்மனத்தில் - உத்தமியே நற்றாயே! நல்லம்மர் நல்கிய நல்லறத்தால் உற்றதுவே “ஓம்சிவாய” ஓர்ப்பு. காரைநகர் மண்மறவா காருண்ய நல்லம்மா! ஆரையும் தான்மதித்து அன்புகாட்டும் - ஊருடனே உற்றாரும் போற்றும் உம்குணமாம் தர்மங்கள் மற்றார் மறந்திலரே மாண்பு. அன்பும், பொறுமையும், ஆர்க்கும், உதவும் இன்பண்பும் எல்லாமே எம்தாயின் - நண்பாம் இலக்கியமே நாம்காணும் நற்றாய் அடைவே! தலமாம் நிறைசிவனின் தாள். உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி! என்றும் உங்கள் நினைவுடன் வாழும் பிள்ளைகள், மருமக்கள்,

தொடர்புகளுக்கு

பிள்ளைகள்
(416) 847-7106