அமரத்துவமாது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம் (செல்வதி)

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்னை மடியில்:22-11-1933  – ஆண்டவன் அடியில்:  03-08-2005
திதி: 21-07-2017

கடந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் உங்களை நினைத்து

கலங்குது நெஞ்சங்கள் இங்கு

பிரிந்தது நீங்கள் இல்லை அம்மாவே!

எங்கள் உயிரல்லவோ அம்மா

ஆயிரம் நிலவொளியாய் அன்பைப் பொழிந்த அம்மாவே!

கடலலையாய் பாசம் தந்த அம்மாவே!

எம்மைவிட்டு நீங்கள் போகவில்லை – என்றும்

எம் உயிரோடும் உணர்வோடும் வாழ்கிறீர்கள்

அன்பால் எமையணைத்து அமுதமொழி பேசி

இன்பமாய் வாழ வைத்து இனிய முகம் மலர்ந்து

வன்சொல் அறியாது வாழ்ந்த அம்மாவே!

ஆண்டுகள் பல சென்றாலும் அம்மாவின் பாசமுகம்

எங்களுயிர் உள்ளவரை எம்மை விட்டு நீங்காதம்மா!

உங்கள் நினைவால் வாடும் அன்புக் கணவர், மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்

தகவல்

குடும்பத்தினர் தொடர்புகளுக்கு

416 291 2796