- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

அப்துல் கலாம் சிலை அருகில் பகவத் கீதையா?- வைகோ எதிர்ப்பு
அப்துல் கலாம் நினைவு மண்டபத்தில் அவர் சிலைக்கு அருகில் பகவத் கீதையை வைத்துள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறியதாவது: ”கலாமுக்கு நினைவு மண்டபம் அமைத்ததை வரவேற்கிறோம். ஆனால் அப்துல் கலாம் வீணை வாசிப்பது போல சிலை எதற்கு? பக்கத்தில் பகவத் கீதை எதற்கு? திருக்குறளை விட சிறந்ததா பகவத் கீதை?
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி உறுதியோடு தமிழக அரசு இருக்க வேண்டும். பொறியியல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு வரும் என்கிறார்கள். இத்தகைய சூழலில் செப். 15-ல் அண்ணா பிறந்த நாள் விழா நடத்தப்படுகிறது. அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்” என்றார் வைகோ.