அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: டிடிவி தினகரனை ஜூன் 8-ல் நேரில் ஆஜர்படுத்த வேண்டும்- வாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரனை வரும் ஜூன் 8-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த ஏதுவாக அவ ருக்கு சிறை மாற்று வாரன்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 1996-97 காலகட்டத்தில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது அமலாக்கத் துறையினர் 2 வழக்கு களை பதிவு செய்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்குகள் எழும்பூர் 2-வது பொரு ளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இதில் ஒரு வழக்கில் தினகரன் மீதான குற்றச்சாட்டு கடந்த மாதம் பதிவு செய்யப்பட்டு விட்டது. மற்றொரு வழக் கில் குற்றச்சாட்டு இன்னும் பதிவு செய் யப்படவில்லை. இந்த வழக்கு இரு தினங்களுக்கு முன்பு எழும்பூர் பொரு ளாதார குற்றவியல் நீதிபதி எஸ்.மலர் மதி முன்பாக விசாரணைக்கு வந்த போது, டிடிவி தினகரனை டெல்லி போலீஸார் எந்த வழக்கில் கைது செய் துள்ளனர்? அவர் மீதுள்ள குற்றச் சாட்டு என்ன? தற்போது எந்த சிறை யில் உள்ளார்? என்பது போன்ற விவ ரங்களோடு முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய அமலாக்கத் துறை யினருக்கு உத்தரவிட்டு வழக்கை மே 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதன்படி, இந்த வழக்கு நீதிபதி எஸ்.மலர்மதி முன்பு நேற்று மீண் டும் விசாரணைக்கு வந்தது. அப் போது அமலாக்கத் துறை சார்பில் துணை இயக்குநர் சாதிக் முகம்மது ஆஜராகி, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரால் கைது செய்யப் பட்டு திஹார் சிறையில் உள்ளதாக ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, தினகரன் மீதுள்ள மற்றொரு வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக வரும் ஜூன் 8-ம் தேதி அவரை நேரில் ஆஜர்படுத்தவும், அதற்கு ஏதுவாக தினகரனுக்கு சிறை மாற்று வாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டார்.