- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

அதிர்ச்சி தகவல் : பாகிஸ்தான் விமானிகளில் 30% மேற்பட்டவர்கள் போலி விமானிகள் !!
பாக்.,கில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் போலி பைலட் உரிமங்களை வைத்துள்ளதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் குலாம் சர்வார் கான் தெரிவித்துள்ளார்
இது குறித்து அவர் அந்நாட்டு பார்லியில் மேலும் தெரிவித்ததாவது, ‘நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பறக்கும் அனுபவம் இல்லை. போலி உரிமம் வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருகின்றனர்’ இவ்வாறு கூறினார்
அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக தெரிகிறது. விபத்து நடப்பதற்கு முன் கன்ட்ரோல் ரூமிலிருந்து வந்த எச்சரிக்கையை கவனிக்காமல் பைலட்கள் இருவரும் கொரோனா வைரஸ் குறித்து உரையாடி இருந்ததாக தெரிகிறது.