அதிமுக விவகாரங்களில் பிரதமருக்கு தொடர்பு இல்லை: மத்திய அமைச்சர் விளக்கம்

அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகி யோருக்கு தொடர்பு கிடையாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம் கோடங்கிப் பட்டியில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழா அழைப்பிதழை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதியிடம் வழங்கும் காட்சிகளை செய்தித்தாள்களில் காணமுடிந்தது. எதற்காக இப்படி செய்கிறார்கள் என புரியவில்லை.
அதிமுக விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோ ருக்கு சம்பந்தம் கிடையாது. முதல்வர் பழனிசாமி, வறட்சி நிவாரணமாக ரூ.40,000 கோடி உட்பட ரூ.71,000 கோடியை கோரியுள்ளார். இது நடைமுறை சாத்தியமற்றது என்றார்.