- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் சென்னை வர ஓபிஎஸ் அழைப்பு
அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க சென்னைக்கு வருமாறு தனது அணி சார்ந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுகவில் முதல்வர் பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் தினகரன் அணி என 3 அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில், சிறை சென்று திரும்பிய தினகரன், மற்ற இரு அணிகளும் இணைவதற்கு 60 நாட்கள் அதாவது ஆகஸ்ட் 4-ம் தேதி (இன்று) வரை காலக்கெடு விதித்தார். அத்துடன், ஆகஸ்ட் 5-ம் தேதி கட்சி அலுவலகத்துக்கு வரப்போவதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் மாவட்ட நிர்வாகிகள், நாளை (சனிக்கிழமை) சென்னை வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
ஓபிஎஸ்-ஸின் இந்த அழைப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.