- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்: சூலூர் எம்எல்ஏ கனகராஜ்
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சூலூர் எம்எல்ஏ கனகராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறுகையில், ”மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக இருக்க வேண்டும். அப்போதுதான், நலத்திட்ட பணிகள் நடைமுறைப்படுத்தப்படும். அதற்கு அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக, கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பெரியகுயிலியில் தனியார் கல்குவாரியில் விதிமீறல்கள் இருப்பதாகவும், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குவாரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, குவாரி விபத்து குறித்து சரியான விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காவிட்டால் சட்டப்பேரவையில் வேறு அணிக்கு ஆதரவளிக்கப் போவதாகத் தெரிவித்தார்.
சசிகலா அணியில் இருந்துகொண்டு அவர் இவ்வாறு பேசியது அதிமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அமைச்சர்கள் சிலர் கனகராஜை சமாதானப்படுத்தும் முயற்சியிலும், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அவரது ஆதரவு கேட்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனது கோரிக்கைகள் நிறைவேறா விட்டால் நிச்சயம் அணி மாறுவேன் என்று எம்எல்ஏ கனகராஜ் கூறினார். தற்போது அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.