அடையாளத்தை மாற்றி இந்தியாவில் பதுங்கிய இலங்கை தாதா பிடிபட்டான் !!

இலங்கை தாதா அங்கொட லொக்கா, 36. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் கோவையில் தங்கியிருந்தான். இவரது மர்ம மரணம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஏழு தனிப்படைகள் விசாரித்து வருகின்றன.

இந்நிலையில், தன்னை யாரும் அடையாளம் காண முடியாத அளவுக்கு உருவத்தை மாற்ற அங்கொட லொக்கா திட்டமிட்டுள்ளார். இதையடுத்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அவர் அணுகியுள்ளார். அங்கு தான் சினிமாவில் நடிக்க உள்ளதாகவும் அதற்காக தனது மூக்கை சற்று பெரிதாக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவரது பேச்சை உண்மை என, நம்பிய டாக்டர்கள் அவருக்கு மூக்கில் கடந்த, பிப்., மாதம் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பின் மாறுபட்ட முகத்துடன் அங்கொட லொக்கா உலா வந்துள்ளார்.

கடந்த, 2017ம் ஆண்டு, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சென்னை போலீசாரால் அங்கொட லொக்கா கைது செய்யப்பட்டார். அப்போது அவரது கைரேகைகள் உட்பட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் சென்னை போலீசார் சேகரித்து வைத்துள்ள கைரேகை உட்பட அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளனர்.

அங்கொட லொக்கா கோவையில் இருந்து கொண்டு வாட்ஸ்ஆப் அழைப்புகள் மூலம், இலங்கையில் உள்ள தனது கூட்டாளிகளை இயக்கியுள்ளார். இதற்காக அவர் பயன்படுத்திய மொபைல்போன் தற்போது மாயமாகியுள்ளது. இந்த மொபைல்போன் யாரிடம் உள்ளது, அவர் பயன்படுத்திய எண் உள்ளிட்டவை குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.