அடுத்த ஜனாதிபதிதேர்தலில் போட்டியிடும் வகையில்அமெரிக்ககுடியுரிமையைக் கைவிடுவேன் என்கிறார்முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய

2020 இல் இடம் பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்குத் தயார் என்றும்,அதற்காக அமெரிக்க குடியுரிமையைக் கைவிடுவேன் என்றும் முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சா தெரிவித்துள்ளார். ஆங்­கில ஊடகம் ஒன்­றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக நீங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக பேசப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதுபற்றி யாரேனும் உங்களை அணுகினார்களா?
பதில்: இல்லை. ஆனால்,பேசப்படுகி­றது. அது­பற்றி முடிவு செய்­வ­தற்கு இன்னமும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கின்­றன என்றுநான் நினைக்கிறேன். அது முன்னாள் ­ஜனாதிபதி மஹிந்த ராஜபகக்சாவைப் பொறுத்த விடயம். மிகச்சிறந்த வேட்பாளர் யார் என்று அவரே முடிவு செய்வார். வெற்றி பெறக்கூடிய- பொருத்தமான வேட்பாளர் யார் என்பது அவருக்குத் தெரியும்.

கேள்வி: தற்­போ­தைய சூழ்­நி­லையில்,அந்த வகி­பாகம் குறித்து என்ன நினைக்­கி­றீர்கள்?
பதில்: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை விட, வேட்­பா­ள­ரா­வ­தற்கு பொருத்­த­மா­னவர் வேறு எவரும் இல்லை. மக்கள் ஆத­ர­வையும்,பிர­ப­லத்­தையும்,தற்போ­தைய சூழ்­நி­லையில் தேவைப்­படும் தலை­மைத்­து­வத்தை வழங்கக் கூடிய ஆற்­ற­லையும் கொண்­டுள்­ளவர் அவர்; அனு­பவம் மிக்­கவர்.19 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தச்­சட்­டத்­தினால், துர­திர்ஷ்­ட­வ­ச­மாக, அவர் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக போட்­டி­யிட முடி­யாது. அவ­ரது ஆத­ரவைப் பெற்ற எவ­ரேனும் ஒரு­வரால்தான் வெற்றி பெறமுடியும்.

கேள்வி: உங்­களை வேட்­பா­ள­ராகத் தெரிவு செய்தால், அந்தச் சவாலை எதிர்­கொள்­வ­தற்கு, நீங்கள் தயாரா?
பதில்: அவர் அவ்­வாறு நினைத்தால், நான் போட்­டி­யி­டுவேன். அதற்­காக முன்­வ­ருவேன். போட்­டி­யி­டு­வ­தற்­கான ஆற்றல் எனக்கு இருப்­ப­தாக நான் நினைக்­கிறேன்.

கேள்வி: அமெ­ரிக்குடி­யு­ரி­மையைக் கொண்­டுள்­ளதால், இரட்டைக் குடி­யு­ரிமை உங்­க­ளுக்குத் தடை­யாக இருக்­கி­றது. இதனை எப்­படி தீர்க்கப் போகி­றீர்­கள்?
பதில்: 19 ஆவது திருத்தச் சட்­டத்­தினால் இப்­போது என்னால் போட்­டி­யிட முடி­யாது. இருந்­தாலும்,முன்னாள் ஜனா­தி­பதி என்னை வேட்பாளராகத் தெரிவு செய்தால், இரட்டைக் குடியுரிமையை கைவிடும் செயல்முறைக்கு செல்ல வேண்டும்.
கேள்வி: அதற்கான செயல் முறைகள் என்ன?பதில்: அதுஎன்னைப் பொறுத்தவிடயம். அதற்கான செயல்முறை உள்ளது. அது தெளிவான- குறுகிய நடைமுறைதான் என்றார்.